டி 20 போட்டியில் 10 ரன்னுக்கு ஆல் அவுட்… மோசமான சாதனையைப் படைத்த மங்கோலியா!

vinoth
வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:16 IST)
2026 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. கடந்த தொடரில் 20 அணிகள் கலந்துகொண்ட நிலையில் அதே போல அதிகள் அடுத்த தொடரிலும் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. இதில் சிங்கப்பூரில் நடந்த தொடரில் சிங்கப்பூர் மற்றும் மங்கோலியா ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மங்கோலியா அணி 10 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் டி 20 போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை மங்கோலியா படைத்துள்ளது. இதையடுத்து ஆடிய சிங்கப்பூர் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 13 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்