பலோன் டி’ஓர் விருதுகள் பரிந்துரை! 20 ஆண்டுகளில் முதல்முறையாக மெஸ்ஸி - ரொனால்டோ பெயர் இல்லை!

Prasanth Karthick
வியாழன், 5 செப்டம்பர் 2024 (11:11 IST)

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பலோன் டி’ஓர் விருதுகளில் ரொனால்டோ - மெஸ்ஸி பெயர் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கால்பந்து தொடர்பாக வழங்கப்படும் உயரிய விருதுகள் கவனம் ஈர்ப்பவையாக உள்ளன. அப்படியா ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறுன் பலோன் டி’ஓர் என்ற கால்பந்து விருது வழங்கப்படுகிறது.

 

இந்த விருதை அதிகமுறை வென்றவர்கள் கால்பந்து விளையாட்டின் லெஜெண்டுகளான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான். 2003ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பலோன் டி’ஓர் பரிந்துரையில் இடம்பெற்று வரும் லியோனல் மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் இந்த விருதை வென்றுள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது 2024ம் ஆண்டிற்கான பலோன் டி’ஓர் விருது பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தில் மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்