128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுகிறது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் இந்த ஒலிம்பிக்ஸ் விழாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ஃபேர்கிரௌண்ட் பகுதிகள் பொது நிகழ்ச்சிகள், கல்வி கண்காட்சிகள், வணிக நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் இடமாகவே அறியப்படுகிறது. ஆனால், இங்கு இதுவரை கிரிக்கெட் விளையாட்டிற்கென அமைந்துள்ள தரைப் பகுதியில் ஒரு பிட்சும் அமைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் போட்டிகள் தொடங்க இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதால் அதற்குள் பிட்ச் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.