IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (15:16 IST)
இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் வடிவமாக டி 20 கிரிக்கெட் உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் லீக் போட்டிகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். இதில் மிகப்பிரபலமாக இருப்பதும் அதிகம் பேரால் விரும்பிப் பார்க்கப்படுவதுமான தொடராக பிசிசிஐ நடத்தும் ‘ஐபிஎல்’ தொடர் உள்ளது.

இதில் 2 மாதங்கள் விளையாடும் ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளுக்காக ஒரு ஆண்டு விளையாடினால் சம்பாதிக்கும் வருவாயை விட பல மடங்கு சம்பாதிக்க முடிகிறது. இதன் காரணமாக உலகில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் காரணமாக இந்த தொடருக்கு ஸ்பான்சர்கள் குவிகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் PSL தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸிடம் “நீங்கள் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் ஆகிய இரண்டு தொடர்களிலும் விளையாடியுள்ளீர்கள்.. இரண்டில் எது சிறந்தது?” எனக் கேட்க அவரோ “ஐபிஎல் தொடருடன் உலகில் நடக்கும் மற்ற எந்த தொடரையும் நாம் ஒப்பிட முடியாது. ஐபிஎல் தொடர்தான் நம்பர் 1. அதற்கு இணையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி 20 தொடர்களைக் கூட சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்