வில்லனுக்கு தனுஷ்கோடி எனப் பெயர் வைத்தது ஏன்? வெங்கட்பிரபு விளக்கம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (18:00 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் படத்தில் வில்லனான எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்திருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த அதற்கு விளக்கம் அளித்துள்ளார் வெங்கட்பிரபு. அவர் அளித்த நேர்காணலில் ‘வில்லன் கதாபாத்திரத்துக்கு வலிமையான ஒரு பெயர் வேண்டும் என்பதால் அப்படி வைத்தோம். ரஜினி – கமல், விஜய் – அஜித் என்பது போல சிம்பு என்று சொன்னாலே தனுஷ் பெயர் நியாபகத்துக்கு வந்துவிடும். இதற்காக தனுஷே போன் செய்து சந்தோஷப்படுவார் என நினைக்கிறேன்’ என மழுப்பலான பதிலை சொல்லி தப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்