சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

vinoth

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (07:01 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகர் சல்மான் கானின் திரைவாழ்க்கை பிரகாசமாக இல்லை. அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது. ஆனால் ரிலீஸாவதற்கு முன்பே இந்த படத்தின் HD பிரிண்ட் முதல் நாளே இணையத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதன் மூலம் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்துள்ளது. படம் தோல்வி அடைந்தது கூட பரவாயில்லை, ஆனால் முருகதாஸின் படம் போலவே ‘சிக்கந்தர்’ இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் சிக்கந்தர் படம் பற்றியும் முருகதாஸ் பற்றியும் பேசும்போது “சல்மான் கானை வைத்து நாம் நினைப்பது போல எல்லாம் படம் எடுக்க முடியாது. அவர் வரும் நேரத்துக்கு மட்டும் ஷூட்டிங் எடுக்க முடியும். க்ளோஸ் அப் ஷாட்களில் மட்டுமே அவர் நடிப்பார். மற்ற காட்சிகளில் அவரின் டூப்பை வைத்துதான் எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். இதனால் முருகதாஸுக்கு அந்த படத்தில் என்ன நடைமுறை சிக்கல்கள் இருந்தன என்று தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்