எல்லா மொழிகளிலும் வெற்றி மழையில் மாநாடு! – வெங்கட் பிரபு மகிழ்ச்சி ட்வீட்!

திங்கள், 29 நவம்பர் 2021 (15:02 IST)
சிம்பு நடித்து வெளியான மாநாடு அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் செய்து வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. கடந்த 2019ம் ஆண்டிலேயே படப்பிடிப்பு தொடங்கியிருந்தாலும் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளை கடந்து இறுதியாக தற்போது இந்த படம் வெளியாகியுள்ளது.

கடந்த 25ம் தேதி படம் ரிலீஸான நிலையில் முதல் நாள் தொடங்கி படத்திற்கு பெரும் வரவேற்பும், நல்ல விமர்சனங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு “4 நாட்களில் தமிழக டிஸ்ட்ரிப்யூட்டர்கள் லாபம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி மக்களே. தொடர்ந்து கேரளா, கர்நாடகாவிலும் மூன்றே நாட்களில் லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது” என கூறி மாநாடு படக்குழுவினர் படத்தை பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்