இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

Siva

வியாழன், 10 ஏப்ரல் 2025 (18:38 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தமன்னா தற்போது பிசியாக இல்லை என்றாலும், தன்னுடைய ஒரு பாடல் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடனமாடிய ‘காவாலா’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த பாடலின் வெற்றி, படத்திற்கே ஓர் அசாதாரண வசூலை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
 
22 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நாளையே முழுப்பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இன்னொரு ஹிட் ஆவதற்கான அறிகுறிகள் அதிலிருந்தே தெளிவாக தெரிகின்றன.
 
மே 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள ‘ரெய்டு 2’ படத்தில் அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், சுப்ரியா பதக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தில் தமன்னா மட்டுமல்ல, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் யோ யோ ஹனி சிங் ஆகியோர் கூட இரண்டு பாடல்களில் ஆட்டம் ஆடியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
 

Sabke dil aur dimaag pe chadhega​ #Nasha!????????

Song Out Tomorrow. #Raid2 knocking in cinemas on 1st May.@ajaydevgn @Riteishd @Vaaniofficial #RajatKapoor #SaurabhShukla #SupriyaPathak @amit_sial @rajkumar_rkg #BhushanKumar #KrishanKumar @KumarMangat @AbhishekPathakkpic.twitter.com/kEnrvvNDIb

— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 10, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்