‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழா: வீடியோ வெளியிட்ட வெங்கட்பிரபு!

திங்கள், 29 நவம்பர் 2021 (11:08 IST)
‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழா: வீடியோ வெளியிட்ட வெங்கட்பிரபு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிந்ததே 
‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் 22 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் மிக விரைவில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழாவை வெங்கட்பிரபு சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்று கொண்டாடியுள்ளனர் இது குறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெங்கட்பிரப், ‘மாநாடு’ படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றி என்று கூறியுள்ளார்
 
வெங்கட்பிரபு, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன், சுரேஷ் காமாட்சி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவில் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்