மாநாடு ரீமேக் உரிமைக்கு கடுமையான போட்டி! அடித்தது ஜாக்பாட்

திங்கள், 29 நவம்பர் 2021 (11:26 IST)
மாநாடு படத்தின் வெற்றி மற்ற மொழிகளில் அதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதில் போட்டோ போட்டியை உருவாக்கியுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற மிகப்பெரிய அளவில் போட்டி நிலவுகிறதாம். இந்தியில் முன்னணித் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதற்கான பேச்சுவார்த்தையை இப்போது நடத்தி வருகிறதாம். இதன் மூலம் ஒரு மிகப்பெரிய தொகை தயாரிப்பாளருக்கு லாபமாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்