முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

vinoth

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (09:01 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஜெயிலரின் உதவியுடன் வெளியே வரும் அஜித், தனது மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் மகனை மீட்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.

கதை அரதப் பழசாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கிய விதத்தில் ஆதிக் வெற்றி பெற்றுள்ளார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை நாட்கள் இல்லாத ஒரு வேலை நாளில் இந்த வசூல் மிகப்பெரிய வசூல் என்று சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்