நடிகை வித்யுலேகாவின் திருமணப் புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:51 IST)
நடிகை வித்யுலேகா ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து பல படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் சஞ்சய் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் ஆன நிலையில்  இப்போது திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்