விஜய் ஆண்டனி நடிப்பின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. எந்த வகையான சூழ்நிலைக்கும் ஒரே மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிகர் என்பதுதான். ஆனால் அந்த குறையை நிவர்த்தி செய்ய அவர் திரைக்கதைகளை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியை அக்னி சிறகுகள் படத்தில் இயக்கும் இயக்குனர் நவீன் இதுபற்றி விமர்சனம் செய்துள்ளார்.
கோடியில் ஒருவன் பார்த்த அவர் ஒரே எக்ஸ்பிரஷனை வச்சிட்டு ஒரு ஹீரோ ரெண்டு மணிநேரம் நம்மளை போரடிக்காம என்டர்டெயின் பண்றார். அம்மா சென்டிமெண்ட் & விஜய் ஆண்டனி காம்போ எப்பவுமே சூப்பர்ஹிட்தான்னு மீண்டுமொருமுறை கோடியில் ஒருவன் நிரூபிச்சிருக்கு. மாஸ் சீன்லகூட காமெடி அழகா வொர்க்அவுட் ஆகுது. பக்கா தியேட்டர் படம் எனப் பாராட்டியுள்ளார்.