கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

Siva

ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (11:53 IST)
2019 ஆம் ஆண்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த "கைதி" திரைப்படம் வெளியானது. அதன் பின்னர், அவருக்கு விஜய்யின் "மாஸ்டர்" படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

"மாஸ்டர்" படத்தை முடித்ததும், "கைதி" படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த நிலையில் தான், கமல்ஹாசன் லோகேஷை அழைத்து, "விக்ரம்" படத்தை இயக்க வாய்ப்பு வழங்கினார்.

இதனை அடுத்து, "விக்ரம்" படத்தை முடித்தவுடன் "கைதி 2" படம் பண்ணலாம் என்று லோகேஷ் நினைத்திருந்தார். ஆனால் விஜய், மீண்டும் அவரை அழைத்து "லியோ" படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு, ரஜினியின் "கூலி" படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், "கைதி 2" திரைப்படம் தொடர்ந்து தள்ளி வந்தது.

இந்த நிலையில், "கூலி" படத்தை முடித்தவுடன், நிச்சயம் "கைதி 2" பண்ணப் போகிறேன் என்று லோகேஷ் கூறினார். ஆனால் தற்போது, அஜித், லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டுள்ளதாகவும், அந்த கதை அவருக்கு "ஓகே" என்றதும் அடுத்த படத்தின் இயக்குநர் லோகேஷ் தான் என்றும் கூறப்படுகிறது.

இதனால், "கைதி 2 " இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு   இந்த ஆண்டு இறுதியில்  தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ரஜினி, கமல், விஜய் ஆகியோரால் ‘கைதி 2’ திரைப்படம் தள்ளிப் போன நிலையில், தற்போது அஜித்தால் தள்ளி போகிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்