சமீபத்தில் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீரிலீஸ் ஆன நிலையில் அதில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்த பெண் வைரலாகி வருகிறார்.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடித்து 2005ல் வெளியான படம் சச்சின். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 2005ல் வெளியான இந்த படம் அதன் 20வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த வியாழக்கிழமை ரீரிலீஸ் செய்யப்பட்டது.
சச்சின் படத்தை டிவியில் மட்டுமே பார்த்திருந்த ஏராளமான விஜய் ரசிகர்களும், பொதுமக்களும் புதிய படத்திற்கு செல்வது போல சென்று படத்தை பார்த்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்தான் சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு தோழியாக வரும் பெண் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளார், ரீரிலீஸில் அவரை ரசித்து பார்த்த பல ரசிகர்கள் அவர் யார் என இணையதளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். படத்தில் அவர் இடம்பெறும் காட்சிகளை எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு ஹார்ட்களை பறக்க விட்டுள்ளனர். இணையத் தகவல்களின்படி, அவரது பெயர் ரஷ்மி என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள ரஷ்மி தன்னை படத்தில் பார்த்து தேடி அங்கீகாரம் அளித்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K
எல்லோரும் ஷாலினியை பார்த்துட்டு இருக்கும் போது.. ????????♂️ pic.twitter.com/KeGpvylNyt
— ???? (@Itz_Rmd) April 20, 2025