இதற்கிடையில், நடிகை ஊர்வசிக்கு மத குருக்கள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். "ஊர்வசியின் தகவல் தவறானது" என்றும், பத்ரிநாத் அருகில் உள்ள கோவில் "ஊர்வசி தேவி கோயில்" என்றும், அது சசிதேவியுடன் தொடர்புடையது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கோவிலுக்கும் நடிகை ஊர்வசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். "அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இந்த கோவிலை வழிபட்டு வருகிறார்கள்" என்றும், அப்படிப்பட்ட ஒரு கோவிலை நடிகை தன்னுடைய பெயரில் உள்ள கோயில் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் மத குருக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"இது போன்று பேசுபவர்கள் மீது அரசு கடமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், "ஊர்வசியின் கருத்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும், "புராண மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் கொண்ட ஊர்வசி தேவியின் கோவிலை தனிப்பட்ட நபர் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் கூறியுள்ளனர்.
இதனால் நடிகை ஊர்வசிக்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, "தென்னிந்திய படங்களில் தான் நடிக்கிறேன் என்பதால் தென்னிந்தியாவிலும் ஒரு கோவில் தனக்கு கட்ட வேண்டும்" என்று கூறியதற்கும் தென்னிந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.