டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

Prasanth Karthick

ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (14:01 IST)

பிரபல நடிகை சிம்ரன் வயதான நடிகைகளுக்கு கொடுக்கப்படும் கதாப்பாத்திரங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், கமல் என பலருடனும் படம் நடித்த இவர், பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கும் ஜோடியாக நடித்தார். தற்போது வயதாகியிருக்கும் சிம்ரன் பல்வேறு துணைக் கதாப்பாத்திரங்களில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

 

சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் சில நிமிட கேமியோ காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சிம்ரன் “சமீபத்தில் ஒரு நடிகைக்கு ‘உங்களை அந்த கதாப்பாத்திரத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்’ என மேசேஜ் அனுப்பினேன். அதற்கு அவர் ‘ஆண்ட்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இது எவ்வளவோ மேல்’ என்று பதில் அளித்தார். மிகவும் பொறுப்பற்ற பதில் அது.

 

டப்பா கதாப்பாத்திடங்களில் நடிப்பதை விட, ஆண்ட்டி, அம்மா போன்ற கேரக்டரில் நடிப்பது எவ்வளவோ சிறந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலேயே நான் அம்மாவாக நடித்திருந்தேன். நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்கு முதலில் நம்பிக்கை தேவை’ எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்