நாளை வெளியாகிறது சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு!

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:02 IST)
சிம்பு நடிக்கும் அவரின் 48 ஆவது படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது.

இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்