அட வித்யுலேகாவா இது… ஆளே அடையாளம் தெரியலயே!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (19:32 IST)
நகைச்சுவை நடிகையான வித்யுலேகா ராமன் தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது 27 கிலோ எடையைக் குறைத்து போலிஸ் கெட்டப்பில் பிட்டாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் அது வித்யுலேகாவா என்ற ஆச்சர்யத்தில் உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்