‘அருண் விஜய் 31’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (19:22 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய்யின் 31வது திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அருண்விஜய் 31’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தை 11:11 புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்துள்ள இந்த படத்தில் ஸ்டெபி பட்டேல் என்ற நடிகையும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
 
சிஎஸ் சாம் இசையில், ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் பகவதி பெருமாளும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்