முதலில், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனை அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் சந்திக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு செல்லும் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன், அங்கே உள்ள VFX (விஎஃப்எக்ஸ்) நிறுவனங்களை சந்தித்து, தங்கள் கதையை விளக்கிய பிறகு அதற்கேற்ற காட்சிகளை வடிவமைக்குமாறு கூறும் காட்சிகளும் காணப்படுகின்றன.
அதில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களிடம் அட்லீ கதை சொன்ன பிறகு அவர்கள் பேசும்போது, அட்லீ சொன்ன கதையை கேட்டு எனக்கு இன்னமும் தலை சுற்றுகிறது, இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை என மிரண்டு பேசுகிறார்கள். அப்படி என்ன கதையை அட்லீ சொல்லியிருப்பார் என்று வீடியோ பார்ப்போருக்குமே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் அவர்கள் அந்த படம் தொடர்பாக சில வீடியோக்களை எடுத்து ஒரு முன்னோட்டம் பார்த்தனர்.
இந்த வீடியோவில் உள்ள காட்சிகளைப் பார்த்தபோது, இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மேலும், தமிழில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்றும், எந்திரன், 2.0 அளவிற்கு ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு படத்தையே அட்லி இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.