அருண்விஜய் -ஹரி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:06 IST)
நடிகர் அருண்விஜய் நடிக்க இருக்கும் 33வது படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் ஹரிக்கு இந்த படம் 16 வது படம் என்பது தெரிந்ததே
 
இந்த படத்தில் ஏற்கனவே பிரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர் என்று வெளியான செய்தியை பார்த்தோம். அதேபோல் ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அருண்விஜய் 33’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல் என்றும் கலை இயக்குனர் சக்தி வெங்கடேஷ் என்றும் எடிட்டர் அந்தோணி என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

The Action director #AnlArasu, Cinematographer #Shakthivel, Art director #Saktheevenkatraj & Editor #Anthony is with us #AV33 & #Hari16#DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @gvprakash @0014arun @ertviji @clusters_media @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/C7QQRMRQzt

— Drumsticks Productions (@DrumsticksProd) February 11, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்