குட் பேட் அக்லி படத்தின் கதையை த்ரிஷாவுக்கு சொல்ல வந்த போது, "அஜித் sir என்னிடம் ஏற்கனவே கதையையும், என்னுடைய கேரக்டரையும் சொல்லிவிட்டார்" என த்ரிஷா கூறியதாகவும் இது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படும் தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, இந்த படத்தில் த்ரிஷா எப்படி வந்தார் என்று அவர் கூறும்போது, "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பில் இருந்து தான் த்ரிஷாவுக்கு போன் செய்தேன் எனத் தெரிவித்தார். "அப்போது கதையை சொல்லட்டுமா? என கேட்டபோது, த்ரிஷா 'அஜித் சார் என்னிடம் ஏற்கனவே கதையையும், என் கேரக்டரையும் சொல்லிவிட்டார். நான் நடிக்கிறேன், எனக்கு ஓகே' என்றார்" என கூறினார்.
"நான் சொல்ல வேண்டியதை எல்லாம் அஜித் த்ரிஷாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார். அஜித் சார், எனக்கு முன்பே திரிஷாவிடம் கதை சொல்லி, அவரிடம் நடிக்க அனுமதியும் பெற்றுவிட்டார் என்பதை அறிந்தேன். அதனால் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்" என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 'விடாமுயற்சி' படப்பிடிப்பின்போது அஜித், த்ரிஷாவிடம் குட் பேட் அக்லி படத்தின் கதையையும் சொல்லி இருப்பார் என கூறப்படுகிறது.