’சீயான் 60’ படத்தில் இணைந்த ஸ்டண்ட் இயக்குனர்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (19:20 IST)
விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’சீயான் 60’ என்பதும் இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.    சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்தில் ஏற்கனவே சிம்ரன் வாணிபோஜன் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக தினேஷ் சுப்பிரமணியன் இணைந்துள்ளார். இது குறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் உறுதி செய்துள்ளது தினேஷ் சுப்பிரமணியன் இயக்கத்தில் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்