குட் பேட் அக்லி படத்திற்கான முதல் காட்சி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர்கள் அழுத்தம் தருவதால் பல திரையரங்குகள் முதல் காட்சியை ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் முதல் சிங்கிள், ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.
குட் பேட் அக்லி படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என்பதால் பல இடங்களில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் பட விநியோகஸ்தர்கள் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.
மல்டிப்ளெக்ஸில் முதல் காட்சிக்கு ரூ.1900, தனி தியேட்டர்களில் ரூ.500 என விற்க சொல்லி விநியோகஸ்தர்கள் செக் வைப்பதாகவும், இல்லாவிட்டால் முதல் காட்சி தர முடியாது என மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பல திரையரங்குகள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியான தியேட்டர்களில் குட் பேட் அக்லி முதல் திரையிடலே மதியம் 12 மணிக்குதான் தொடங்க உள்ளதாம். இது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K