'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

Siva

திங்கள், 7 ஏப்ரல் 2025 (18:53 IST)
சென்சார் வாரியம் தடை விதித்த ‘சந்தோஷ்’ திரைப்படத்தை திரையிடத் துணிந்து விட்டோம்; தேவையானால் கைது செய்யட்டும்  என்று ஆவேசமாக  இயக்குநர் பா. ரஞ்சித் கூறி பரபரப்பை கிளப்பினார்.
 
சமீபத்தில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஒரு சிறப்பு திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா. ரஞ்சித், உலகம் முழுவதும் விருதுகள் பெற்ற சமூக விழிப்புணர்வு திரைப்படங்கள் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில், சென்சார் தடை விதித்த ‘சந்தோஷ்’ திரைப்படத்தையும் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதுபற்றி பேசிய பா. ரஞ்சித், “இந்த படம் திரையிட கூடாது என காவல்துறையினரிடம் இருந்து எச்சரிக்கைகள் வந்துள்ளன என்றும், “தடை மீறினால் திரையிட்டால் லேப் உரிமையை ரத்து செய்யப்படும்” என அச்சுறுத்தல்களும் இடம் பெற்றதாகக் கூறினார்.
 
“இந்தப் படத்துக்கு திரையரங்கம் அனுமதிக்கவில்லை என்றால் வெளியே திரையிடுவோம். அப்படிச் செய்ததற்காக எங்களை கைது செய்தாலும், சிறையில்தான் இருப்போம். அங்கு புத்தகங்களை வாசிப்போம். அது நம்முடைய புதிய அனுபவமாக அமையும். எதற்கும் தயார்” என்றார் பா. ரஞ்சித்
 
இக்கூற்றுகள் சமூக வட்டங்களில் பரபரப்பையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது.
 
இயக்குநர் சந்தியா சூர்யா இயக்கியுள்ள 'சந்தோஷ்' திரைப்படம், இந்திய சமூகத்தில் நிலவும் ஜாதி வேறுபாடுகள், பாலியல் வன்முறை போன்ற கடுமையான பொருள்கள் குறித்து வெளிப்படையாக பேசுகிறது.
 
இந்தியாவில் தணிக்கை வாரியம் இப்படத்துக்கு அனுமதி மறுத்திருந்தாலும், இந்தக் குறும்படம் உலகளவில், குறிப்பாக ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வு செய்யும் அளவுக்கு பாராட்டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்