ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
குட் பேட் அக்லியின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் தியேட்டர் சென்று வைப் செய்ய அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கும் வகையில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. படம் முழுவதும் ஆக்ஷன் என்பதால் 2+ மணி நேரங்கள் தியேட்டரே அதிரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Edit by Prasanth.K