நள்ளிரவில் தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த காரியம்.. கைது செய்த போலீசார்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (18:17 IST)
நள்ளிரவில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா செய்த காரியத்தை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 
 
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை மாதவரம் என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் அவருடைய எதிர் வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் நித்யா திடீரென நள்ளிரவில் எதிர் வீட்டுக்காரரின் காரை கல்லால் அடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் எதிர் வீட்டுக்காரர் சிசிடிவி உதவியுடன் அதை செய்தது நித்யா தான் என்பதை கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
இதனை அடுத்து காவல்துறையினர் நித்யாவை கைது செய்துள்ளதாகவும் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்