ரசிகரின் மொபைல் போனை தூக்கிவீசிய பாலிவுட் நடிகர்

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (16:48 IST)
இந்தி சினிமாவில் பிரபல  நடிகர் ரன்பீர் கபூர்.இவர் ரசிகரின் செல்போனை தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இவர் ஏ தில் ஹாய் முஷ்கில், ஏய் ஜவானி ஹாய் தீ, சம்சரா, பிரமாஸ்தரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட்டை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகள் பிறந்துள்ளார்.

இவர், சமீபத்தில் தன் மனைவி உறவினர்களுடன் வெளியே சுற்றுலா சென்றபோது, ஒரு ரசிகர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார்.

அவரை ரன்பீர் கபூரின் பாதுகாவலர்கள் தடுக்க முயற்சித்தனர். அவரை தடுத்த ரன்பீர் கபூர், ரசிகர் செல்ஃபி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து, அவரிடமிருந்து செல்போனை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்.

எனவே, ரன்பீர் கபூரின் செயலுக்கு எதிர்ப்பும், கண்டனங்களும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்