தேசிய கீதம் பாட சொன்ன அதிகாரிகள்! திருதிருவென விழித்த நபர் கைது!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:18 IST)
கோவை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொல்லி, பாடாததால் கைது செய்துள்ளனர்.

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து விமான, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்திலும் அனைத்து பயணிகளும் தரவாக சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்திற்கு சார்ஜா விமானத்தில் ஒரு நபர் வந்துள்ளார். அவர் இந்தியர் என்பதற்கான பாஸ்போர்ட்டும் வைத்திருந்துள்ளார். ஆனால் அவர் இந்தியர் போல் இல்லாததால் விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ: படத்தை பாத்துட்டு துணிவுடன் கொள்ளையடிக்க வந்தேன்! – வங்கி கொள்ளையன் வாக்குமூலம்!

இதனால் அவரை இந்திய தேசிய கீதம் பாட சொல்லியுள்ளனர். ஆனால் அவர் பாட தெரியாமல் திருதிருவென விழித்துள்ளார். அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் உசேன் என்பதும், இந்தியர் போல போலி பாஸ்போர்ட்டை தயாரித்து இந்தியாவிற்குள் நுழைந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்