பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப் பற்று ஆகியப் படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லாப் படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் பெற்றன.
அவரது புகைப்படங்களில் மிகவும் இளைத்து ஆள் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். மேலும் அவரது பதிவுகள் எல்லாம் விரக்தி மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. அவர் நடித்த படங்களின் சம்பள பாக்கி, மற்றும் பட வாய்ப்புகள் இல்லாதது ஆகியவற்றின் காரணமாக போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாகவும், அவரை அவரது குடும்பத்தினரால் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீயின் குடும்பத்தினர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் “ஸ்ரீ தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.