ஹீரோ வேடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாரா சந்தானம்?.. திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

vinoth

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (10:15 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.

இந்நிலையில் அவர் காமெடியனாக நடித்து 12 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த மத கஜ ராஜா சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்நிலையில் சிம்பு 49 மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் மீண்டும் காமெடியனாக நடிக்கவுள்ளார். அதன் காரணமாக தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த இரண்டு படங்களையே தற்போது நிறுத்தி வைத்துவிட்டாராம். அதற்குக் காரணம் ஹீரோவாக நடிப்பதை விட காமெடியனாக நடிப்பதில் அதிக சம்பளம் பெற முடியும் என்பதுதானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்