கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பிளஸ்1 மாணவியை வன்கொடுமை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள பெருமாதுறை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜசீர்(26). இவர், இன்ஸ்டாகிராம் மூலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழகியுள்ளார்.
பின்னர் குண்டராவுக்கு அவரை காரில் ஏற்றிச் ச்என்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுறது.
மாணவியைக் காணாததால் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். இந்த நிலையில், மாணவியைப் பலாத்காரம் செய்த ஜசீர் அவரது நண்பர்களான நவுபல், நியாஸ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.