இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

Siva

வியாழன், 17 ஏப்ரல் 2025 (21:12 IST)
இந்த வாரம் பல திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. இதில் முக்கியமாக இயக்குநர் அமீத் கோலானி இயக்கிய Lock Out திரைப்படம், நிமிஷா நாயர் மற்றும் காந்தர்வ் திவான் ஆகியோரது நடிப்பில் ஏப்ரல் 18 அன்று ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.
 
அதேபோல், காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ’காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது.
 
நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள ’கிங்ஸ்டன்’ திரைப்படமும் தற்போது ஜீ5-ல் பார்க்கக்கூடியதாக உள்ளது.
 
இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கத்தில் ரூபா கொடுவாயூர் நடிப்பில் உருவான ’எமகாதகி’ திரைப்படம் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது.
 
லிஜோமோல் மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் வெளியான ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் டெண்ட்கொட்டா தளத்தில் வந்துள்ளது.
 
மேலும், கடந்த வாரம் வெளியான ஸ்வீட்ஹார்ட் (ஜியோ சினிமா), பெருசு (நெட்பிளிக்ஸ்), ஒத்த ஓட்டு முத்தையா (டெண்ட்கொட்டா) மற்றும் படவா (சிம்பிளி சவுத்) போன்ற படங்களும் ஓடிடியில் காத்திருக்கின்றன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்