குருதி ஆட்டம் திரைப்படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன் இயக்குனரோடு சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
குருதி ஆட்டம் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சில ஆண்டுகளுக்கே முன்பே முடிந்துவிட்டாலும் பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் ஸ்ரீகணேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.

இதையடுத்து இந்த வாரம் குருதி ஆட்டம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளார். படம் பார்த்த பின்னர் இயக்குனர் ஸ்ரீகணேஷ் மற்றும் தயாரிப்பாளர் முருகானந்தம் ஆகியோரிடம் படத்தைப் பாராட்டி பேசியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்