குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (19:10 IST)
குற்றாலம் அருவிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இடத்தை அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தென் மாவட்டங்களில் நல்ல மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு சென்று வந்தனர் 
இந்தநிலையில் செங்கோட்டை அச்சன்கோவில் வழியில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க திடீரென தடை விதிக்கப்பட்டது
 
மேலும் அருவியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு எனவும் தகவல் வந்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 இருப்பினும் நாளை அல்லது நாளை மறுநாள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்