அன்பறிவ் சகோதரர்களோடு கமல்ஹாசன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

vinoth

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (11:10 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த வாரம் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் இந்த படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சென்ற கமல்ஹாசனுடன் அன்பறிவ் சகோதரர்களும் சென்று திரைக்கதையை முடித்துத் திரும்பினர். இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி ரூபாய் எனவும், அதனால் இந்த படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனத்திடம் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்