“அந்த கஷ்டம் எனக்குத் தெரியும்…” சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் ஆதங்க பதிவு!

வெள்ளி, 29 ஜூலை 2022 (15:56 IST)
இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சில ஆண்டுகளுக்கே முன்பே முடிந்துவிட்டாலும் பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் ஸ்ரீகணேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.

இந்நிலையில் நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் ஸ்ரீகணேஷ் பற்றிய தன்னுடைய முகநூல் பதிவில் “அன்பு தம்பி Sri Ganesh இன் இரண்டாவது படமான #குருதிஆட்டம் ட்ரெய்லர் மிக சிறப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட என்போன்றே நீண்ட இடைவெளிக்குபின் இரண்டாவது படம் வெளியாக போகிறது. இத்தனை காலம் அந்த மனநிலையை தக்கவைத்துக்கொள்வதன் சிரமங்களை நானறிவேன். மிக எளிமையான, அன்பும் அறமும் நிறைந்த ஒரு படைப்பாளி. நிச்சயம் ஶ்ரீகணேஷ் வெற்றிபெறுவான். பெறவேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி” எனக் கூறியுள்ளார்.

ரவிக்குமார் நேற்று இன்று நாளை வெற்றிக்குப் பிறகு இயக்கிய அயலான் திரைப்படம் 5 ஆண்டுகளாக இன்னமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்