சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 படமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான மத கஜ ராஜா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தை முடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா, முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோர் நடிக்க சத்யா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள இயக்குனர் சுந்தர் சி “Money heist பாணியில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதைதான் கேங்கர்ஸ். ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு டீச்சர் இவர்களை வைத்து நகைச்சுவையாகக் கொடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.