இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஐஆர்சிடிசியும் ஈடுபட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் ஐஆர்சிடிசி இயக்கும் ரயில்கள் மற்றும் கேண்டீன்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன், தட்டுகள், கரண்டிகள், பார்சல் பாக்ஸ் மற்றும் பிற பிளாஸ்டிக் பயன்பாட்டு பொருட்களும் மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பாக்குமட்டை, மரம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள், கரண்டிகள் போன்ற மாற்று பொருட்களை உபயோகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.