சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

vinoth
சனி, 28 செப்டம்பர் 2024 (09:28 IST)
சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இன்னும் சிம்பு 48 படம் தொடங்கவில்லை. இதற்கிடையில் அவர் வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதில் டைனோசர்ஸ் பட இயக்குனர் எம் ஆர் மாதவன், 2018 பட இயக்குனர் ஜுட் ஆண்டனி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சிம்பு அடுத்து ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்ப்படுகிறது. அஸ்வத் , டிராகன் படத்தை முடித்ததும் இந்த படம் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்