இந்த படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் படம் அடுத்த கட்டத்தை நோக்கி இன்னும் நகரவில்லை. இந்நிலையில் இந்த பட உருவாக்கத்தில் இயக்குனர் கோகுலுக்கும், நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தில் இருந்து கோகுல் வெளியேறிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் விஷ்ணு விஷால் வேறொரு இயக்குனரை வைத்து படத்தை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.