இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் பிரேம்ஜி & அவர் மனைவி!

vinoth
வியாழன், 13 ஜூன் 2024 (15:46 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

40 வயது கடந்தும் சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என அவரது ரசிகர்களும் சினிமா உலகினரும் கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் அடிக்கடி கேட்கப்பட்டது.  இதையடுத்து அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருத்தணி கோயிலில் இந்து என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் பிரேம்ஜியின் பெரியப்பாவான இளையராஜா வந்து வாழ்த்தவில்லை. இது சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது பிரேம்ஜி தன்னுடைய மனைவி இந்துவோடு சென்று இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்