பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் மக்கள் கூட்டத்தில் நடந்து சென்றபோது, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.
டார்ஜிலிங்கில் நடந்த இந்த நிகழ்வின் போது, ஸ்ரீலீலா தனது சக நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென அவர் அருகில் வந்து, அவர் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார். இந்த திடீர் நடவடிக்கையால் ஸ்ரீலீலா பயமடைந்து பதற்றம் அடைந்தார்.
அதற்குள் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உடனே அந்த ரசிகரிடம் இருந்து ஸ்ரீலீலாவை மீட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோதும், கார்த்திக் ஆர்யன் ஸ்ரீலீலாவுக்கு நடந்ததை கவனிக்காமல் சென்று கொண்டிருந்தார்.
ஸ்ரீலீலா தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில், ஹிந்தியில் ஒரு படத்தில், மேலும் தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த மூன்றும் இவ்வாண்டில் வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தமிழ் திரையுலக முதல் படமான பராசக்தி ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.