இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.
மேலும், ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த படத்தின் வணிக நடவடிக்கைகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. முதற்கட்டமாக, படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வலுவான தொகைக்கு கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் மொத்த தயாரிப்பு செலவு சுமார் ரூ.65 கோடி என கூறப்படுகின்ற நிலையில், இவ்விரு உரிமைகளின் மூலம் ஏற்கனவே பாதி முதலீடு மீட்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு ரெட்ரோ ஒரு நல்ல வருவாயை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்து பணியாற்றியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில், ஜாக்சன் கலை இயக்கம், பிரவீன் ராஜாவின் ஆடை வடிவமைப்பு, ஜெயிக்கா ஸ்டண்ட் அமைப்பில், சபிக் முகமது அலியின் படத்தொகுப்பில், ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் படம் உருவாகியுள்ளது.