தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து… பிரபல நடிகருக்கு எலும்பு முறிவு!

vinoth
வியாழன், 13 ஜூன் 2024 (15:39 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.  இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு 15 நாட்கள் முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கமல், சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாண்டிச்சேரி ஏர்போட்டில் நடந்த ஆக்‌ஷன் காட்சியின் போது படத்தில் நடிக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் கீழே விழுந்ததில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை சில நாட்கள் மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்