ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது பிரபுதேவாவின் ‘தேள்’

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:38 IST)
அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸிலிருந்து பின்வாங்கியதால் பொங்கல் தினத்தில் 8 திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதும் அவற்றில் ஒன்று பிரபுதேவா நடிப்பில் உருவான ‘தேள்’என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘தேள்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் தற்போது முடிந்து உள்ளதாகவும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகும் ‘தேள்’திரைப்படம் ஒரு சில வாரங்களில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பி
 
பிரபுதேவா, சம்யுக்தா, யோகி பாபு நடிப்பில் ஹரிகுமார் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி உள்ளது ‘தேள்’ திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்