பிரபுதேவாவின் ‘தேள்’ படத்தின் சென்சார்: ரன்னிங் டைம் இவ்வளவுதானா?

செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:58 IST)
பிரபல நடிகர் பிரபுதேவா நடித்த ‘தேள்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
‘தேள்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 115 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2 மணி நேரத்திற்குள்ளாக ரன்னிங் டைம் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரபுதேவா ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ஹரிகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் பிரபுதேவாவுக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்