படம் ரிலீஸாகும் முன்பே வீடியோ பாடல் ரிலீஸ்: ‘தேள்’ படத்தின் புதிய அப்டேட்!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:22 IST)
பிரபுதேவா நடித்த ‘தேள்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொங்கல் தினத்தில் வலிமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அந்த படம் பின்வாங்கியது. இதனை அடுத்து பொங்கல் தினத்தில் 8 திரை படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவற்றில் ஒன்று பிரபுதேவா நடிப்பில் ஹரிகுமார் என்பவர் இயக்கத்தில் உருவான ‘தேள்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற மாதவி பொன் மயிலாலாக என்ற பாடலின் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சி சத்யா இசையமைப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்