தனுஷ் சேகர் கமுலா திரைப்படத்தில் இணையும் பிரபல ஹீரோ!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:40 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து  முடித்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி நடிக்க உள்ளதாகவும், அவரிடம் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்